சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு புதிய அபராதம் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது!

0

சிங்கப்பூரில், போக்குவரத்து காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இணைந்து மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கையில், சைக்கிள் ஓட்டும் விதிகளை மீறிய 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LTA-வின் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் வெளியான தகவலின்படி, விதிகளை மீறியவர்களில் சிலர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் குழுவாக சைக்கிள் ஓட்டியுள்ளனர். மேலும், சிலர் பாதுகாப்பு தரநிலைகளுக்கு உட்படாத சைக்கிள்களை பயன்படுத்தியுள்ளனர்.

சைக்கிள் ஓட்டுபவர்கள் அனைவரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என LTA நினைவூட்டுகிறது. ஐந்து சைக்கிள் ஓட்டுபவர்கள் மட்டுமே ஒரே வரிசையில் செல்ல முடியும். இரண்டு வரிசைகளாக சென்றால் பத்து பேர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஒவ்வொரு குழுவிற்கும் இடையே 30 மீட்டர் இடைவெளி (சுமார் இரண்டு மின் கம்பங்களுக்கு இடையேயான தூரம்) இருக்க வேண்டும்.

விதிகளை மீறுவோரை தொடர்ந்து கண்காணிப்போம் என்றும், பாதுகாப்பற்ற முறையில் சைக்கிள் ஓட்டுவதால் விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் LTA எச்சரிக்கிறது.

சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்வது, அதிவேக நெடுஞ்சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு $150 அபராதம் விதிக்கப்படலாம்.

பாதுகாப்பான சைக்கிள் பயணம் குறித்த மேலதிக விவரங்களுக்கு, LTA-வின் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Leave A Reply

Your email address will not be published.