நஞ்சிங்கில் மின்சார சைக்கிள்களால் ஏற்படும் தீ விபத்து அபாயம் அதிகாரிகள் தீவிர சோதனையில்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நஞ்சிங் நகர அதிகாரிகள், மின்சார சைக்கிள்களால் (இ-பைக்குகள்) ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 23ஆம் தேதி உயரமான குடியிருப்பு கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பதினைந்து பேர் உயிரிழந்து, 44 பேர் காயமடைந்த சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அன்றைய தினம் அதிகாலை 6 மணிக்குள் அணைக்கப்பட்ட இந்த தீ, கட்டிடத்தின் தரை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இ-பைக்கிலிருந்து பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. நஞ்சிங்கின் மையப்பகுதியில் 2013 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆறு கட்டிடங்களில் ஒன்றான இதில், தரை தளம் இ-பைக்குகள், சாதாரண சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற செயற்பாடுகளை தடைசெய்யும் விதிகள் இருந்தபோதிலும் இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இ-பைக்கு தொடர்பான தீ விபத்துகள் குறித்த அழுத்தமான சிக்கலை வெளிப்படுத்துகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும், இ-பைக்குகளால் சுமார் 21,000 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 17.4% அதிகமாகும். சீனா இ-பைக்குகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாகவும், அவற்றை அதிகளவு பயன்படுத்தும் நாடாகவும் இருப்பதால், நெருக்கமாகக் கட்டப்பட்ட நகர்ப்புறங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பாதுகாப்பு அம்சங்களை கவனிப்பது அவசியம் என்பதை அரசு உணர்ந்துள்ளது.
image the straits times