செல்போன் சார்ஜிங் காரணமாக தீ விபத்து ஒருவர் பலி, இருவர் தீவிர சிகிச்சையில்!
செங்கல்பட்டில், செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கிய போது ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சர்வன்குமார் (25) உயிரிழந்தார், மேலும் விபின் (32) மற்றும் சுதீர்வர்ஷன் (27) தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
மூவரும் செட்டிபுண்ணியம் பகுதியில் கட்டுமான வேலை செய்து வந்தனர் மூவரும் ஒரே அறையில் தாங்கினர்.
அந்த இரவு, அவர்கள் வழக்கம்போல செல்போன்களை சார்ஜ் செய்ய வைத்து உறங்கினர். அதிகாலை மின்கசிவால் தீப்பற்றி, அறையில் இருந்த பொருட்கள் எரிய ஆரம்பித்தன.
தீயில் சிக்கிய மூவரும் உயிருக்கு போராடினார்கள். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர், ஆனால் சர்வன்குமார் உயிரிழந்தார்.
மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.