NEX மால் அருகே பேருந்து கார் மோதிய விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

0

சிங்கப்பூர் NEX ஷாப்பிங் மால் அருகே அக்டோபர் 6 ஆம் தேதி இரவு, SBS Transit நிறுவனத்தின் 53ஆம் இலக்க பேருந்து, வெள்ளை நிற டொயோட்டா காருடன் மோதியது. இந்த விபத்து அப்பர் சிரங்கூன் சாலை மற்றும் சிரங்கூன் சென்ட்ரல் சந்திப்பில் சுமார் இரவு 9.50 மணியளவில் நடந்தது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், பேருந்து சாலையின் நடுவில் நின்று, அதன் முன்பக்கம் மோசமாக சேதமடைந்துள்ளதாக காணப்படுகிறது. பேருந்தின் முன் கண்ணாடி விரிசல் அடைந்தது, நம்பர் பிளேட்டும் தொங்கிய நிலையில் இருந்தது. மோதிய கார் முன்சக்கரம் விலகி விழுந்து கிடந்தது. பயணிகள் பாதுகாப்பாக பேருந்திலிருந்து இறக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 46 வயது கார் ஓட்டுநர் சிறிதளவு காயமடைந்தார். அவர் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். பேருந்து சாரதி மற்றும் பயணிகள் பாதிக்கப்படவில்லை என SBS Transit நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நிறுவனம் வருத்தம் தெரிவித்ததுடன், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.