தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
சென்னையிலிருந்து குவாஹாட்டி செல்ல புறப்பட்ட இண்டிகோ விமானம், வானில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 162 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம், கோளாறு காரணமாக திரும்பி சென்னையில் தரையிறக்கப்பட்டது.
விமானி, தொழில்நுட்ப பிரச்சினையை கண்டுபிடித்து உடனே சென்னை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அதிகாரிகள் உடனடியாக விமானத்தை திரும்பி தரையிறக்க உத்தரவிட்டனர், அதன்படி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
அழைப்புப் பிரச்சினை சரிசெய்ய முயற்சித்தும் சீராகாததால், பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.