மது அருந்திய இளைஞர் பாம்பை விழுங்கிய அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் என்ற இளைஞர், அதிக அளவில் மது அருந்திய நிலையில், ஒரு இறந்த பாம்பை கடித்து விழுங்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்ட அவரது தாயார் திகைந்து போனாலும் தைரியமாக நடந்து கொண்டு, உடனே பாம்பை அவரது வாயிலிருந்து எடுத்துக் கொண்டு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தற்போது அகிலேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.