சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் ஜூவல் சாங்கி 5 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு கொண்டாட்டங்களைத் தொடங்குகிறது!

0

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பிரமிக்க வைக்கும் அமைப்பாகத் திகழும் ‘ஜூவல் சாங்கி’, தனது 5-வது ஆண்டு விழாவைச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தனித்துவமான விற்பனை வாய்ப்புகளுடன் கொண்டாடத் தயாராகி வருகிறது.

இந்த வருடம் முழுவதும், இந்த முக்கிய நிகழ்வைக் குறிக்கும் வகையில் ‘ஜூவல்’ பல்வேறு விழாக்களுடன் உங்களை வரவேற்கவிருக்கிறது.

கடந்த நிதியாண்டில் (2023), ஜூவல் சாங்கியில் பார்வையாளர்களின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 26% உயர்வாகும். இங்கு வருகை தந்தவர்களில் சுமார் 30% பேர் சீனா, மலேசியா, தைவான், அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள்.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தன் கவர்ச்சிகரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், ‘ஜூவல் சாங்கி’ ஆண்டு முழுவதும் பல்வேறு ஆண்டுவிழா நிகழ்வுகளைத் தொடங்குகிறது. புதிய ஒளி-நீர்வீழ்ச்சி காட்சிகள், மழைச்சுழல் காட்சியின் பின்னணியை ரசிக்கும் சுற்றுலாப் பயணங்கள், புதிய கடைகள், மற்றும் ஜூன் மாத பள்ளி விடுமுறைக் காலத்தில் மலர் கண்காட்சி போன்ற சிறப்பு நிகழ்வுகள் இதில் அடங்கும்.

பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவங்களை வழங்கி, பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் என அனைவருக்கும் ‘ஜூவல் சாங்கி’ ஒரு முக்கிய இடமாக விளங்கச் செய்வதே இதன் நோக்கம்.

Leave A Reply

Your email address will not be published.