சிங்கப்பூர் பொருளாதாரம் 2024-ல் 2.4% வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது!

0

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய மதிப்பீடான 2.3%-ஐ விட சற்று அதிகம்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) சமீபத்திய கணக்கெடுப்பின்படி பணவீக்கம் 3.1% ஆக இருக்கும் எனவும், இது அண்மைக்கால மதிப்பீடான 3.4%-ஐ விடக் குறைவு.

உணவு மற்றும் எரிபொருள் விலைகளைத் தவிர்த்து கணக்கிடப்படும் முக்கிய பணவீக்கம் 3.0% என்ற நிலையில் உள்ளது.

23 பொருளாதார நிபுணர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2025-ல் 2.5% விரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் இறுதிக்குள் வேலையில்லா விகிதம் 2.1% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான உலகளாவிய நிதி நிலைமைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்ற காரணிகள் நிதிச் சந்தைகளைப் பாதிக்கக்கூடும்.

இதற்கு நேர்மாறாக, தளர்வான உலகளாவிய நிதி நிலைகள் மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆகியவை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

MAS படி, பொருளாதார வீழ்ச்சி மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் இதன் முக்கிய எதிர்மறை அபாயங்களாக உள்ளன.

DBS வங்கியின் பொருளாதார நிபுணர் Chua Han Teng, 2.2% GDP வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது, இருந்தாலும் வளர்ந்த பொருளாதாரங்களில் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் சவால்களை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறார்.

பொருளாதார நிபுணர்கள் சமீபத்திய GDP வளர்ச்சிக்கான காரணங்களில் பலவற்றைச் சுட்டிக்காட்டுகின்றனர், அதில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் Eras Tour கச்சேரிகளும் அடங்கும்.

ப்ளூம்பெர்க் செய்திகளின்படி, கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.9% விரிவடைந்துள்ளது.

இது 2.5% என்ற திருத்தப்பட்ட ஆண்டு வளர்ச்சி எதிர்பார்ப்புக்கு வழிவகுக்கிறது. இந்த எதிர்பார்ப்பு அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கான 1% முதல் 3% வரையிலான கணிப்புடன் ஒத்துப்போகிறது.

Leave A Reply

Your email address will not be published.