சிங்கப்பூர்NTS Permitயில் இருந்து S Pass மாறுவது எப்படி? தற்போது S Passயில் யாருக்கு, என்னன்னெ வேலைகள் உள்ளன!

0

சிங்கப்பூரில் வேலை செய்ய பலர் S pass விசாவையே விரும்புகின்றனர். ஏனெனில், இது மற்ற விசா வகைகளை ஒப்பிடும்போது அதிக சம்பளம் பெற வழிவகுக்கும். ஏற்கனவே வேறு அனுமதி பத்திரங்களின் கீழ் சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களால் கூட S pass விசாவிற்கு, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, மாற முடியும்.

இந்தக் கட்டுரை என்.டி.எஸ் அனுமதி பத்திரத்தில் (NTS Permit) இருந்து S pass விசாவிற்கு மாறுவதற்கான வழிமுறைகளை விளக்குகிறது. சிங்கப்பூர் அரசாங்கம் S pass விசாவிற்கு குறைந்தபட்ச மாதச் சம்பளமாக $3,500 நிர்ணயித்திருக்கிறது.

ஆனாலும், எல்லாS pass வைத்திருப்பவர்களுக்கும் அந்தத் தொகை கிடைப்பதில்லை. வேலை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து சம்பளம் மாறுபடும். அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அதிக சம்பள வாய்ப்புகள் உள்ளன.

NTS அனுமதி பத்திரம் என்பது வங்காளதேசம், இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கானது.S pass விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் வேலைக்காக சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், பட்டம் அல்லது முதுகலை பட்டம் போன்ற தகுதியான கல்விச் சான்றுகளையும், நிலையான மாத வருமானத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

S pass விசாவிற்கு நீங்கள் தகுதியானவரா என்பதை, S pass சுய மதிப்பீட்டு கருவி (S Pass Self-Assessment Tool) மூலம் சரிபார்த்து கொள்ளலாம். விண்ணப்பத்தை உங்கள் நிறுவனமே உங்களுக்காக சமர்ப்பிக்க முடியும். விண்ணப்ப செயல்முறையின் போதும், S pass அனுமதி கிடைக்கும் வரையிலும் உங்கள் என்.டி.எஸ் அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும்.

S pass விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்படும் முன்பே உங்கள் NTS அனுமதியை நிறுவனம் ரத்து செய்யக்கூடாது. ஒருவேளை, உங்கள் NTS காலாவதியாகும் நிலை நெருங்கிவிட்டால், உங்கள் நிறுவனத்திற்கு தெரிவித்து, கால நீட்டிப்பு கேட்பது அவசியம்.

தற்போது தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் போன்ற துறைகளில் தான் பெரும்பாலும் S பாஸ் வேலைகள் உள்ளன. கடந்த காலத்தை ஒப்பிடும் போது, வெளிநாட்டினருக்கான S pass விசா ஒதுக்கீடு சற்று குறைக்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.