மனைவியின் ஆடையில் மினிமார்ட் கொள்ளை முயற்சிக்காக சிங்கப்பூர் ஆணுக்கு தண்டனை!

0

சிங்கப்பூரில், தன் மனைவியின் உடையை அணிந்து கொண்டு கத்தியுடன் ஒரு சிறு சந்தையைக் கொள்ளையடிக்க முயன்ற 39 வயது நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கொள்ளை முயற்சி மற்றும் திருட்டு ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்ட மஹ்மூத் அப்தெல்டவாப் ரியாத் அப்தெல்ஹாக்கிற்கு, இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 15, 2023 அன்று, டோ பாயோவில் உள்ள ஒரு கடையில், தன் மனைவியின் உடை மற்றும் முகமூடி அணிந்து, சமையலறை கத்தியுடன் நுழைந்தார் மஹ்மூத். இந்த சம்பவம் பற்றி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

அப்போது, 74 வயதான கடைக்காரரிடம் கத்தியை காட்டி, கத்தக் கூடாது என்று மஹ்மூத் எச்சரித்துள்ளார். இருப்பினும், அவரைக் கண்டதும் கடைக்காரர் அலறியதால், அங்கிருந்து மஹ்மூத் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபடாமல் இருக்க, அருகிலிருந்த குப்பைத் தொட்டிகளில் தனது மனைவியின் ஆடைகளையும், கத்தியையும் தனித்தனியாக வீசியெறிந்துள்ளார். அதே நாளில் கைது செய்யப்பட்ட மஹ்மூத்தின் மனைவியின் ஆடைகள் குப்பைத் தொட்டிகளிலிருந்து மீட்கப்பட்டன.

இது மட்டுமின்றி, நவம்பர் 2022 இல், தனது உடன்பிறந்த சகோதரியின் பூட்டிய படுக்கையறையில் இருந்து இரண்டு மோதிரங்களைத் திருடியதற்காகவும் மஹ்மூத் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 3,199 டாலர் மதிப்புள்ள அந்த மோதிரங்களை வெறும் 247 டாலருக்கு அடகு வைத்துள்ளார்.

மோதிரங்கள் காணாமல் போனதை மஹ்மூத்தின் சகோதரி கண்டுபிடித்து, அறைக்கு உதிரிச் சாவி அவரிடம் இருந்தது நினைவுக்கு வந்தபோது, அவர் மீது சந்தேகம் எழுந்தது.

Leave A Reply

Your email address will not be published.