மலேசிய கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்!

0

ஏப்ரல் 23 ஆம் தேதி ராயல் மலேசிய கடற்படை அணிவகுப்பு ஒத்திகையின் போது, இரண்டு ஹெலிகாப்டர்கள் வான்வெளியிலேயே மோதி விபத்துக்குள்ளானதில், அவற்றில் பயணித்த பத்து பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

லுமுட் கடற்படை தளத்திலுள்ள TLDM ஸ்டேடியத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் ஏற்பட்ட தீயில் ஒரு ஹெலிகாப்டர் ஸ்டேடியத்தின் படிக்கட்டுகளிலும், மற்றொன்று அருகில் இருந்த நீச்சல் குளத்திலும் விழுந்து நொறுங்கியது.

இந்த துயரச் சம்பவத்தை ஒட்டி நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அதே வேளையில், உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்த மோதல் விபத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. விபத்துக்கு முந்தைய காட்சிகளில் இரண்டு ஹெலிகாப்டர்களும் அணிவகுப்புக்காக குறைந்த உயரத்தில் பறந்து செல்கின்றன.

திடீரென அவற்றில் ஒன்று மற்ற ஹெலிகாப்டரின் பின்புற சுழலியில் மோதியதில் இரண்டுமே கட்டுப்பாட்டை இழந்து சுழன்று விழுந்தன. இந்நிகழ்வு குறித்து விசாரிக்க டிஎல்டிஎம் ஒரு விசாரணைக்குழு அமைக்கும் என்று அறிவித்துள்ளது.

அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் மீது மரியாதை கருதி, விபத்து வீடியோவைப் பகிர வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
image for aljaseera

Leave A Reply

Your email address will not be published.