சிங்கப்பூர் சுற்றுலா பயணி மற்றும் வியட்நாம் மாணவன் தைவான் சாலையில் 4 கிமீ தொலைவில் தனித்தனி விபத்துகளில் இறந்தனர்!
மியோலியின் ஷிடன் டவுன்ஷிப்பில் உள்ள மாகாண நெடுஞ்சாலை எண். 3 இல் ஒரு நாளில் இரண்டு வெவ்வேறு விபத்துக்கள் நிகழ்ந்தன, 19 வயது வியட்நாம் மாணவர் மற்றும் 33 வயதான சிங்கப்பூர் பெண் உயிர் இழந்துள்ளனர்.
ஹோங் என்ற மாணவர் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் அவரிடம் செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் உரிமம் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சில மணிநேரங்களுக்குப் பின், சிங்கப்பூர் குடும்பத்தின் கார் 4 கிமீ தொலைவில் உள்ள மின்கம்பத்தில் மோதியது இதில் 36 வயதான ஒரு ஆணும் 5 வயது சிறுமியும் வாகனத்திலிருந்து வெளியேற முடிந்தது, ஆனால் பின் இருக்கையில் சிக்கிய பெண் மீட்பு முயற்சிகளுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சாலையின் கூர்மையான வளைவுகள் மற்றும் சரிவுகள் ஆபத்தானவை என்று போலீசார் எச்சரித்தனர். இவ்விரு விபத்துகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. Image thiwan news.com