மனைவியின் நடத்தையில் சந்தேகம் – மனைவியை கொன்ற கணவன் கைது!
பெங்களூரு அருகே ஹெப்பகோடி பகுதியில் வசிக்கும் மோகன் என்பவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார். அவரது மனைவி கங்காவுடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
இவர்களுக்கு 6 வயது பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில், கங்கா தொழிற்சாலையில் பணியாற்றும் மற்றொருவருடன் நெருக்கமாக பழகியதாக மோகன் சந்தேகப்பட்டார்.
இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 8 மாதங்களுக்கு முன்பு, கங்கா மோகனை விட்டு பிரிந்து தனியாக குடியேறினார்.
குழந்தையை சந்திக்க விரும்பிய மோகன், கடந்த நாள் மனைவியின் வீட்டிற்கு சென்றார். அப்போது, கங்கா குழந்தையை காண்பிக்க மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மோகன், மனைவியை கொல்ல திட்டமிட்டார்.
மறுநாள் காலை, கங்கா தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது, மோகன் நடுவழியில் எதிர்த்து தகராறு செய்தார். பின்னர், கத்தியை எடுத்து தொடர்ந்து குத்தி காயப்படுத்தினார். அங்கிருந்தவர்கள் கங்காவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அவர் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஹெப்பகோடி போலீசார் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.