சிங்கப்பூர் அரசானது வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடியை நீட்டித்துள்ளது..! 

0

சிங்கப்பூர் பல்வேறுபட்ட தொழில் துறைகளில் தொடர்ச்சியாக வேலைக்கு ஆட் குறைபாட்டினை எதிர்கொள்கிறது.

singapore workers

இதனை அடுத்து சிங்கப்பூர் அரசானது கடந்த வாரம் புலம்பெயர்ந்த தொழிலாழர்களுக்கான வரிச்சலுகையை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அதிகரித்துள்ளது.

வணிகச் செலவுகள் அதிகரிப்பு அழுத்தம் காரணமாகவும் மற்றும் அதிகரித்துவரும் ஆள் பற்றாக்குறை காரணமாகவும் இந்த வரிச் சலுகையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரிச் சலுகை நீட்டிப்படைந்ததை மனித வள அமைச்சகம் (MOM) மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சகம் என்பவை அறிவித்துள்ளன.

இவ் வரிச் சலுகையானது கிறுமித் தொற்றுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு பகுதி தீர்வாக சிங்கப்பூர் அரசினால் வழங்கப்படுகிறது.

singapore workers

இது வணிகங்களுக்கு மிகவும் ஆதரவளிக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் CMP துறைகளுக்கும் வரித் தள்ளுபடி சலுகைகளுக்கான காலம் நீட்டிக்கப் படுகிறது.

இந்தியாவில் COVID-19 பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அனைத்துலக விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (மார்ச் 27) மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23 முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக விமானங்கள் இயக்கப்பட்டன.

விமான போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதுடன் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் COVID-19 விதிமுறைகளில் தளர்வுகளும் செய்யப்பட்டுள்ளன.

air-india

முழுமையாக COVID-19 தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பயணிகள் 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் Pre-departure COVID-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

தடுப்பூசிகளுக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்ற Long Term Pass வைத்திருப்பவர்கள், 13 முதல் 17 வயதுடைய Long Term Pass வைத்திருப்பவர்கள் மற்றும் Short Term Pass பார்வையாளர்கள் மற்ற செல்லுபடியாகும் நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

Leave A Reply

Your email address will not be published.