பாம்பன் புதிய பாலம் திறந்த சில மணிநேரத்தில் பழுதடைந்தது!
பிரதமர் மோடி திறந்து வைத்த புது பாம்பன் ரயில் பாலம் சில மணி நேரங்களுக்குள் பழுதடைந்தது.
இன்று ராமேஸ்வரத்தில், பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலம் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது, கப்பல்கள் செல்லும்போது 24 கயிறுகளின் உதவியுடன் செங்குத்தாக உயர்த்தப்படுகிறது.
ஆனால், பாலத்தை மீண்டும் கீழே இறக்கும் முயற்சியில் தொழில்நுட்பத் தடை ஏற்பட்டதால் அது சற்று கோணலாக நின்றது. இதற்கான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதிகாரிகள் பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாலம் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பழுதடைந்ததால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.