வுட்லண்ட்ஸில் வேன் கவிழ்ந்து விபத்து 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அக்டோபர் 28 அன்று வுட்லண்ட்ஸில் ஒரு வேன், ஒரு சைக்கிள் மற்றும் பாதசாரி ஒருவர் விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் மாலை 5 மணியளவில், வுட்லண்ட்ஸ் அவென்யூ 4 மற்றும் அவென்யூ 7 சந்திப்பில் நடந்துள்ளது.
வேன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த போக்குவரத்து விளக்குக் கம்பத்தின் மீது மோதி தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தெரிகிறது. வேன் முதலில் நடைபாதைத் தடுப்பில் ஏறி, பின்னர் கவிழ்வது அங்கிருந்த ஒரு வாகனத்தின் கேமராவிலும் (டாஷ்கேம்) பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் 60 வயதான வேன் ஓட்டுநர், 49 வயதான பாதசாரி மற்றும் 29 வயதான சைக்கிள் ஓட்டி ஆகிய மூவரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை
கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு இரண்டு பேர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஒருவர் உட்லேண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸுக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் SCDF தெரிவித்துள்ளது.
வேன் ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணைகள் இடம் பெறுகின்றன.