சிங்கப்பூர் டோட்டோ குலுக்களில் ஜாக்பாட் விழுந்தது மூவர் வெற்றி பெற்றனர்!
சிங்கப்பூர்: பல வாரங்களாக யாருக்கும் டோட்டோ ஜாக்பாட் விழாத நிலையில், அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த குலுக்கலில் மூன்று அதிர்ஷ்டசாலிகள் இணைந்து $12.42 மில்லியன் மெகா பரிசுத் தொகையை வென்றனர். மூவருக்குமான பரிசுத் தொகை சமமாகப் பகிரப்பட்டதால், ஒவ்வொருவருக்கும் சுமார் $4.14 மில்லியன் வழங்கப்படும்.
வெற்றி பெற்ற அதிர்ஷ்ட எண்கள் 7, 14, 17, 18, 31, 38, மற்றும் கூடுதல் எண் 46 ஆகும். சுவாரஸ்யமானது என்னவென்றால், இந்த மூன்று வெற்றி டிக்கெட்டுகளும் சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சேவை (Account Betting Service) மூலமாகவே வாங்கப்பட்டுள்ளன.
வெற்றியாளர்கள் QuickPick System Roll, QuickPick System 7, மற்றும் System 7 எனும் முறைகளைப் பயன்படுத்தியிருந்தனர். இந்த “சிஸ்டம்” முறைகள் வழக்கமான 6 எண்களுக்குப் பதிலாக அதிக எண்களைத் தேர்வு செய்ய அனுமதிப்பதால், வெற்றி பெறும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன.
இதுடன், இரண்டாம் பரிசு (Group 2) வகையில் 10 பேரும் தலா சுமார் $139,000 வென்றுள்ளனர். 2026 ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் உரிமையாளர்களால் வாங்கப்படாத பரிசுத் தொகைகள் டோட் போர்டு (Tote Board) அமைப்பின் மூலம் நன்கொடைகள் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் தெரிவித்துள்ளது.