கெயிலாங்சோதனைச் சாவடியில் காரை விட்டுவிட்டு ஓடிய மூவர் போலீசார் தீவிர விசாரணை!
ஒரு மெர்சிடீஸ் காரின் டிரைவரும், அவருடன் வந்த இரண்டு பயணிகளும் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு லோரோங் 14 கெய்லாங் சாலையில் போலீசார் அமைத்திருந்த சோதனைச்சாவடியை கண்டதும் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
அந்தக் கார் சோதனைச்சாவடியைத் தவிர்க்க பின்னோக்கி ஓடியதும், பின்னர் லோரோங் 21 கெய்லாஙில் கைவிடப்பட்டதும் தெரிந்தது.
டாஷ்கேம் வீடியோவில், அந்தக் கார் வேகமாக ஓடிவந்து நின்றதும், உடனே மூவரும் வாகனத்திலிருந்து இறங்கி பல திசைகளில் ஓடியதுமாக காணப்படுகிறது. அவர்களில் ஒருவரால் காரில் இருந்த ஒரு பையைக் கைப்பற்றிக் கொண்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர்களைத் தேட போலீஸ் மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டன.
அந்த பகுதியில் குறைந்தது நான்கு போலீசார் காரை ஆய்வு செய்தனர். அருகில் இருந்தவர்கள் இது பற்றிய விசாரணையை கண்காணித்தனர். தற்போது அந்த டிரைவர் மற்றும் இரண்டு பயணிகளைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேலையில் இருக்கின்றனர்.
Image / mothership