KL-காரக் நெடுஞ்சாலையில் வீடு திரும்பும் பயணிகளால் 20 கிமீ போக்குவரத்து நெரிசல்!
ஹரி ராயா ஈதுல் பித்ர் கொண்டாட்டத்திற்காக தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் பயணிகளால் கோலாலம்பூர்-கராக் நெடுஞ்சாலையில் (KLK) கனத்த போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு, கராக் முதல் லெண்டாங் வரை 20 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதிகாரிகள் இது எதிர்பார்த்ததுதான் என்றும், ஞாயிற்றுக்கிழமை வரை வேலைக்குத் திரும்பும் மக்களால் நெரிசல் நீடிக்கலாம் என்றும் கூறினர்.
கோலாலம்பூர் நோக்கி வடக்கு-தெற்கு விரைவுச்சாலையிலும் (PLUS) சிறிய தாமதங்கள் பதிவாகியுள்ளன. பெர்மாத்தாங் பாவ், ஜூரு மற்றும் தைப்பிங் பகுதிகளில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்தது, மேலும் மெனோரா சுரங்கப்பாதை அருகே 3.8 கிமீ நெரிசல் காணப்பட்டது. தெற்கு நோக்கி செல்லும் வழித்தடத்தில், குலாய் முதல் செடெனாக் வரை தாமதங்கள் உள்ளன.
இதற்கிடையில், கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (LPT) இதுவரை எந்த பெரிய நெரிசலும் இல்லாமல் சுமூகமாக உள்ளது. பயணிகள் நீண்ட தாமதங்களை தவிர்க்க தங்கள் பயணத்தை கவனமாக திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆதாரம் /others