துபாயில் வெள்ளச் சீற்றம் வரலாறு காணாத மழையால் போக்குவரத்து ஸ்தம்பிதம்!
ஏப்ரல் 17 அன்று துபாயில் பெய்த கனமழை அனைத்து சாதனைகளையும் முறியடித்து நகரமே தத்தளிக்கும் நிலையை ஏற்படுத்தியது. நெடுஞ்சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
விமான நிலைய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் சாலைகள் ஆறுகளாக மாறின.
வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் இரவு முழுவதும் தங்கள் கார்களிலும் அலுவலகங்களிலும் சிக்கித் தவித்தனர்.
இந்த நிலைமையை உடனடியாக கவனித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் நயன், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும்படியும், உள்கட்டமைப்பு சேதங்களை மதிப்பிடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பெரும் சேதத்தை ஏற்படுத்திய மழையால், துபாயில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. துப்புரவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
துபாய் விமான நிலைய சேவையும் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. விமானங்கள் காலதாமதம் செய்யப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன. சரியான போக்குவரத்து இல்லாததால் விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது பெரும் குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது. இந்த வலுவான மழைப்புயல் ஐக்கிய அரபு அமீரகத்தை மட்டுமல்லாது, அண்டை நாடான ஓமன் மற்றும் பஹ்ரைன் பாதிக்கப்பட்டது.
இதில் பல உயிரிழப்புகளும் நேரிட்டன. பருவநிலை மாற்றம் இதுபோன்ற இயற்கை சீற்றங்களை தீவிரப்படுத்துவதை இது மீண்டும் உணர்த்துகிறது.
image the outelook