2025-க்குள் அனைவருக்கும் விசா பிரித்தானியாவின் புதிய குடிவரவு முறை!

0

பிரிட்டனில் குடிவரவு ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நவீனமயமாக்கள் மூலம் போலி ஆவணங்கள், ஆவணத் தொலைப்பு போன்ற பிரச்சனைகள் குறையும். அதே நேரத்தில் எல்லைப் பாதுகாப்பும் மேம்படும்.

ஏப்ரல் 17, 2024 முதல், குடிவரவு ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அவர்களின் ஆவணங்களை ‘ஈ-விசா’ வாக மாற்றுவது பற்றிய தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

2025-ம் ஆண்டுக்குள் பிரிட்டனில் வசிப்பவர்கள் அனைவருக்கும் ஈ-விசா வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இந்த மின்னஞ்சலில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, ‘Biometric Residence Permits’ (BRP) இணையதளத்தில் கணக்கை உருவாக்கி ஈ-விசா பெறலாம்.

போலி ஆவண மோசடிகளையும், ஆவணத் தவறான பயன்பாட்டையும் தடுப்பதே இந்த ஈ-விசா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள்: ஈ-விசா அறிமுகம், தற்போது பிரிட்டனில் வசிக்கும் எவருடைய குடிவரவுத் தகுதியையும் பாதிக்காது. இது குடிவரவு நடைமுறைகளை எளிமைப்படுத்தி, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய படியாகும்.

image The national news

Leave A Reply

Your email address will not be published.