சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சோகம் நடன ஆசிரியையின் துயர வாழ்க்கை.

0

அடேலெய்டைச் சேர்ந்த நடன ஆசிரியை கெர்ரி ஜோர்டான் (52), கனவு நனவாகி கணவருடன் இங்கிலாந்து சென்று வந்தார். அங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321-ல் வீடு திரும்பும் போது, எதிர்பாராத சோகம் அவரைத் தாக்கியது. மிகவும் பயங்கரமான காற்று அதிர்வால், விமானம் பலமாகக் குலுங்க, கெர்ரி இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

“கழிவறைக்குச் சென்று வந்தேன், அப்போதுதான் இந்த அதிர்வு. இருக்கை பெல்ட்டைக் கூடப் போட முடியவில்லை” என்று கண்ணீருடன் விவரிக்கிறார் கெர்ரி. இந்த விபத்தில் அவருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால், மார்பிலிருந்து கீழ் முழுவதுமாக செயலிழந்து, கைகளைக்கூட அசைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

விபத்துக்குப் பிறகு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலில் அலட்சியமாக நடந்து கொண்டதாக கெர்ரியின் கணவர் குற்றம் சாட்டினார். ஆனால், பின்னர் நிறுவனம் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, உதவி செய்ய முன்வந்ததாகவும் அவர் தெரிவித்தார். கெர்ரி தற்போது ஆஸ்திரேலியாவின் ராயல் அடிலெய்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எதிர்காலமே இருண்டு போன நிலையில், தன்னம்பிக்கையை இழக்காமல் போராடும் கெர்ரி, “இனி என்னால் நடக்கவே முடியாது, கைகளால் சாப்பிடக்கூட முடியவில்லை, போனைக்கூடப் பயன்படுத்த முடியவில்லை” என்று வேதனையுடன் கூறுகிறார். இது போன்ற விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு சட்டப்பூர்வமாகப் போராட முடிவு செய்துள்ளனர் இந்த தம்பதி.

Leave A Reply

Your email address will not be published.