கெப்பல் சாலை நுழைவாயிலில் மோட்டார் சைக்கிள்-லாரி விபத்து 58 வயது நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

0

ஜூன் 11ம் தேதி, Marina Coastal Expressway நோக்கிச் செல்லும் Keppel சாலை நுழைவாயிலுக்கு அருகே மாலை 3 மணியளவில் லாரியுடன் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 58 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து 37 வயது லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கோர விபத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் Singapore Roads Accident என்ற Facebook பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.