ஜெண்டிங் மலைப்பாதையில் பேருந்து விபத்து இரண்டு பயணிகள் உயிரிழப்பு!
ஜுன் 29ஆம் தேதி ஜெண்டிங் மலைப்பாதையில் கீழே இறங்கி வந்த சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இரு ஆண்களுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது, மேலும் அவர்களின் உடல்கள் பென்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
சுற்றுலா பேருந்தில் 18 சீன சுற்றுலா பயணிகள் மற்றும் 3 மலேசியர்கள் ஒரு ஓட்டுநர் மற்றும் இரு சுற்றுலா வழிகாட்டிகள் இருந்தனர்.
என 21 பேர் பயணம் செய்த போது, விபத்து காலை 10.40 மணியளவில் ஏற்பட்டது.
அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து மீட்பு பணிகள் தொடங்கின. கவிழ்ந்த பேருந்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மீட்கப்பட்ட பயணிகள் சாலை ஓரத்தில் நிற்பதை காணலாம் .
யுன்னான் மாகாண சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த இந்த பேருந்து, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. 32 வயதான ஓட்டுநரிடம் ஓட்டுநர் லைசென்ஸ் இல்லை. மேலும், அவர் மீது 27 போக்குவரத்து அபராதங்கள் இருந்தன. மற்ற பயணிகள் லேசான காயங்களுடன் காணப்பட்டனர்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன