யூனோஸ் தொழிற்பேட்டையில் தீ விபத்து!

0

யூனோஸ் தொழிற்பேட்டையில் பெரும் தீ விபத்து பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் தீயணைப்புப் படையினர் இரவு 9:15 மணியளவில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து, மூன்று தொழிற்சாலைகளை பாதித்த இந்த தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.

தீயை அணைக்கும் பணியில் ஐந்து தண்ணீர் பீரங்கிகள் மற்றும் மேலிருந்து தண்ணீர் தெளிக்கும் வசதியும் பயன்படுத்தப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உடனடியாக சிங்கப்பூர் தீயணைப்புப் படையினர் SGSecure செயலி மற்றும் அலைபேசி சேவை வழங்குநர்கள் மூலம் அருகில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியது.

சம்பவ இடத்தை பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, போலீசார் அந்த பகுதியை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

அருகில் உள்ள வணிகங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ‘அசென்ட் வுட்’ என்ற மரச்சாமான்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் திரு. ஆண்ட்ரி லின் தனது கடை குறித்த கவலையை வெளிப்படுத்தினார்.

விபத்து நடந்த பகுதியில் பெரும்பாலான நிறுவனங்கள் மரம் சம்பந்தப்பட்ட வணிகத்தை செய்து வருகின்றன. தீயணைப்புப் படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.

அனைவரையும் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

image The straits times

Leave A Reply

Your email address will not be published.