சிங்கப்பூரில் நல்ல சம்பளத்துடன் Skill Test அடிக்காமல் வேலைக்கு வர வேண்டுமா? PSA தான் இதற்கான பெஸ்ட் சாய்ஸ்.

0

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல சிங்கப்பூர் அரசின் Pass மூலம் செல்ல வேண்டும். PSA என்பது முக்கிய Pass ஆகும்.

2024ல் PSA மூலம் வருபவர்களின் வேலை, சம்பளம், வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலைகள் பற்றி பார்ப்போம். PSA என்பது Port of Singapore Authority ஆகும். PSA உடன் இணைந்த வேலைகள் கப்பல் மற்றும் துறைமுகங்களில் இருக்கும்.

சிங்கப்பூரில் வாகன ஓட்டுனராக வேலை பார்க்க சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை. இதற்கான செலவு ஒரு முதல் இரண்டு லட்சங்கள் ஆகலாம். ஆனால், உங்கள் நாட்டில் ஏற்கனவே ஓட்டுனராக இருந்தால், PSA இல் நேரடியாக டிரைவர் ஆகலாம்.

PSA இல் உள்ள வேலைகள்: டிரைவர் வேலை, லேஷிங் வேலை, Container வேலைகள், கப்பல் சம்பந்தமான வேலைகள். முக்கியமாக டிரைவிங் மற்றும் லேஷிங் வேலைகளுக்கு அதிக ஆட்கள் தேவைப்படும்.

PSA லேஷிங் வேலைகள் என்றால் Containers ஏற்றும், இறக்கும் போது கம்பிகள் பயன்படுத்தி அவற்றை நிலை நிறுத்துவது. PSA வேலைகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும், செலவுகள் கழித்து 40,000-50,000 வரை வீட்டிற்கு அனுப்பலாம்.

PSA வேலைகளில் Overtime அதிகமாக இருக்கும், அதனால் கூடுதல் சம்பாதிக்கலாம். PSA வேலைக்கு தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக ஆட்கள் எடுப்பார்கள், வேலைக்கு முன் டிரைனிங் கொடுக்கப்படும். இதற்காக பணம் கொடுத்து டிரைனிங்கில் கலந்து கொள்ள வேண்டும்.

PSA வேலைக்கு தமிழ்நாட்டில் இருந்து 1,000 பேருக்கு டிரைனிங் கொடுத்தால், 300-400 நபர்களை வேலைக்கு எடுப்பார்கள். ஏஜண்ட்களின் அட்வான்ஸ் பணம் கொடுக்கும் விதம் மாறுபடும். PSA வேலைகள் சற்று கடினமாக இருக்கும், முழுமையாக தயாராகியிருந்தால் சிறப்பாக வேலை செய்யலாம். 2024ல் PSA ஆட்கள் தெரிவு நடைபெறவில்லை, பின்னர் அறிவிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.