2024-ல் சிங்கப்பூரில் S Passக்கு தொடர்பான புதிய கோட்டா முறைகள் மற்றும் சம்பளம் என்னென்ன?

0

2024-ல், வேலைக்காக சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொழிலாளர்கள் பல்வேறு சிங்கப்பூர் பாஸ்கள் மற்றும் அனுமதிகள் மூலம் வருகிறார்கள். அதில் பிரபலமானவை Work Permit, S Pass, E Pass, PCM, மற்றும் Shipyard Pass போன்றவையாகும்.

சிங்கப்பூரில் S Pass மிகவும் முக்கியமானது, அதற்கு வழங்கப்படும் சம்பளத்தினால். இருப்பினும், 2024-ல் S Pass மூலம் வருகை தரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சிங்கப்பூர் அரசு நிர்ணயித்துள்ள கோட்டா முறை.

S Pass கோட்டா என்பது, ஒரு S Pass வேலையின் போது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் விகிதம் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு S Pass வேலைக்கு 100 பேர் பணியமர்த்தப்படுகிறார்கள் என்றால், மனிதவள அமைச்சு ஒரு கோட்டா நிர்ணயிக்கிறது. அது 60% எனில், 100 பேரில் 60 பேர் வெளிநாட்டு ஊழியர்களாகவும், 40 பேர் உள்ளூர் ஊழியர்களாகவும் இருக்க வேண்டும்.

மனிதவள அமைச்சு ஒவ்வொரு துறைக்கும் கோட்டாக்களை நிர்ணயித்துள்ளது. எடுத்துக்காட்டாக, கட்டுமானம் மற்றும் செயலாக்கத் துறைக்கு 83.3%, கடல் கப்பற்பயிற்சி துறைக்கு 77.8%, உற்பத்தி துறைக்கு 60%, சேவைகள் துறைக்கு 35% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானம், கடல் கப்பற்பயிற்சி, செயலாக்கத் துறைகளுக்கு S Pass மூலம் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்த கோட்டா முறைகளால் S Pass மூலம் வருகை தரும் ஊழியர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறைந்துள்ளது. இருப்பினும், இந்த S Pass கோட்டா வரம்புகள் அதிகரிக்கப்படலாம் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பரவலாக பேசப்படுகிறது.

தற்போது, சிங்கப்பூரில் புதிய S Pass விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நிதி துறைக்கு SGD $3,650 மற்றும் மற்ற துறைகளுக்கு SGD $3,150 ஆகும். புதுப்பிப்புகளுக்கு SGD $3,000 ஆகும். S Pass ஊழியர்களுக்கு கம்பெனிகள் கட்டும் லெவி Tier 1 க்கு மாதாந்தம் SGD $550 மற்றும் Tier 2 க்கு SGD $650 ஆகும். S Pass லெவி என்பது, ஒவ்வொரு S Pass ஊழியருக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள் அரசுக்கு கட்டும் தொகை.

மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு வர விரும்பினால், அவர்களின் மாதாந்த சம்பளம் SGD $6,000 இருக்க வேண்டும்.

ஊழியர்கள் பரவலாக கூறுவதாவது, S Passக்கு வழங்கப்படும் சம்பளம் சிங்கப்பூர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறைவாகவே உள்ளது. மேலும், S Pass பெறுவது கடினமாயின், NTS Permit, TWP Pass போன்ற நல்ல சம்பளம் வழங்கும் மாற்று பாஸ்கள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான பாஸைத் தேர்ந்தெடுத்து சிங்கப்பூர் வருவது சிறந்தது.

Leave A Reply

Your email address will not be published.