SMRT பஸ் விபத்தில் தொழிலாளி காயம் பஸ் ஓட்டுநர் பணி இடைநீக்கம்!
சிங்கப்பூர் ஜூன் 27 அன்று ஆன்சன் சாலையில் கட்டுமானத் கட்டுமான தொழிலாளி மீது மோதியதில் SMRT பஸ் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள வீடியோக்களில், 33 வயதுடைய அந்த தொழிலாளர் ஒரு போக்குவரத்து கூம்பை சாலையில் வைக்கும்போது, அந்த பஸ் அவரை மோதியதை காணலாம்.
பஸ் ஓட்டுநரும், மற்றொரு தொழிலாளரும் அவருக்கு உதவினர்.
மாலை 5:25 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தொழிலாளி வலது காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ட்ராஃபிக் கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட்டிருந்தவர், தற்போது சிங்கப்பூர் ஜெனரல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து மனிதவள அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், அனைத்து சாலை பயனாளர்களும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
விபத்து நடந்த போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை என SMRT தெரிவித்துள்ளது.
காவல்துறைக்கு விசாரணையில் உதவுவதோடு, காயமடைந்த தொழிலாளிக்கு உதவி அளிக்கவும் நிறுவனத்தின் குழு தொடர்பில் உள்ளது.