மோட்டார் சைக்கிள் விபத்தில் 53 வயது ஆண் உயிரிழப்பு எருமை மாட்டுடன் மோதல்!

0

53 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் வேலைக்காக சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த போது எருமைமாட்டின் மீது மோதியதில் உயிரிழந்தார். ஜூன் 25, செவ்வாய்கிழமை அதிகாலை 3:40 மணியளவில் ஜாலான் சுங்கை திராமில் விபத்து நடந்தது.

அந்த நபர் டெப்ராவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் பாதையில் எருமை மாட்டில் மோதியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்று செரி ஆலம் காவல்துறைத் தலைவர் சுப்ட் முகமட் சொஹைமி இஷாக் கூறினார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் வீடியோ, காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இருண்ட சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் எருமை மாட்டின் மீது மோதுவதையும், அவனது மோட்டார் சைக்கிள் துண்டு துண்டாக உடைந்து போவதையும் அது காட்டியது.

போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது

Leave A Reply

Your email address will not be published.