போக்குவரத்து விதிகளை மீறியதாக 29 பேர் கைது!

0

மார்ச் 12 முதல் ஏப்ரல் 17 வரையிலான ஆறு வார காலத்தில், போக்குவரத்து விதிகளை மீறிய 29 ஓட்டுனர்களை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

கிட்டத்தட்ட 1,400 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்துகள் அடிக்கடி நிகழும் சாலைகளிலும், விதிகளை மீறும் பகுதிகளிலும் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதிக வேகத்தில் வண்டி ஓட்டுதல், வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல், சரியான பாதையில் வாகனத்தை இயக்காமை, கவனக்குறைவான ஓட்டுநர் நடத்தை போன்றவற்றுக்காக பலருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்கியது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் வைத்திருந்தல், ஆயுதம் வைத்திருந்தல் போன்ற குற்றங்களுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து சட்டத்தின் கீழ், விதிகளை மீறுவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். குற்றத்தின் தன்மை மற்றும் அது மீண்டும் மீண்டும் நிகழ்கிறதா என்பதைப் பொறுத்து தண்டனைகள் மாறுபடும்.

உதாரணமாக, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுவது, அபராதம் மற்றும் சிறைத்தண்டனையை வேறொரு சட்டத்தின் கீழ் சந்திக்க நேரிடும். போலீசார் விதிமுறைகளை அமுல்படுத்தியதுடன், விதிகளை மீறி சாலைகளை கடக்கும் இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சாலைகளை பாதுகாப்பாக கடப்பது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

அனைவரும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விதிகளை கடைப்பிடிக்குமாறு போக்குவரத்து உயர் அதிகாரி டேனியல் டான் அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.