வாடகை காரை திருப்பித் தராத 29 வயது நபர் கைது!

0

கடந்த மார்ச் 30 ஆம் தேதி வாடகைக்கு எடுத்த காரை திருப்பித் தராததாகக் கூறப்படும் 29 வயது நபர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதியம் 1:05 மணியளவில் லோரோங் 3 கெய்லாங் பகுதியில் உதவிக்கான அழைப்பு ஒன்றை காவல்துறையினர் பெற்றனர்.

அங்கு சென்ற காவல்துறையினரை கண்டதும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தப்பியோடினார், ஆனால் பின்னர் பிடிபட்டார்.

போதைப்பொருள், ஆயுதம் வைத்திருந்தல் மற்றும் மோசடியான முறையில் பொருட்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.

மஞ்சள் நிற முடியுடன் அந்த நபரை கார் ஒன்றுக்கு அருகில் பலர் சூழ்ந்திருந்ததை நேரில் பார்த்ததாக ஒருவர் தெரிவித்தார். காவலர்கள் அருகில் வந்ததும், அந்த நபர் ஓட்டம் பிடித்தார், அதையடுத்து அவரை காவலர்கள் துரத்திச் சென்றனர்.

சுமார் 400 மீட்டர் தொலைவுக்குப் பிறகு காவலர்கள் அவரைப் பிடித்தனர். வாடகைக் காரைத் திருப்பித் தராததையடுத்து வாடகை நிறுவன ஊழியர்கள் அந்த சந்தேக நபரைக் கண்டுபிடித்தனர்.

காவல்துறையினர் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன், வாடகை வாகனத்தை சோதனையிட்டு குற்றம் சாட்டப்பட்டவரின் பையில் கத்தி ஒன்றைக் கண்டெடுத்தனர்.

சம்பவ இடத்தில் விசாரணை முடிவடைய சுமார் மூன்று மணி நேரம் ஆனது.
image the reddit.com

Leave A Reply

Your email address will not be published.