கருடா இந்தோனேசியா விமானம் தீப்பற்றியதால் 468 ஹஜ்பயணிகள் அவசர தரையிறக்கம்!

0

புதன்கிழமை, சவுதி அரேபியா நோக்கி 468 பயணிகளுடன் புறப்பட்ட கருடா இந்தோனேசியா விமானம் ஒன்றில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. நல்ல வேளையாக, அனைத்து பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.

போயிங் 747-400 வகையை சேர்ந்த இந்த விமானம் இந்தோனேசியாவின் Makassar நகரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் ஒரு இயந்திரத்தில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த 450 பயணிகளில் பெரும்பாலானோர் ஹஜ் யாத்திரைக்காக பயணித்தவர்கள். விமான ஊழியர்கள் 18 பேரும் உடன் இருந்தனர். இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவருக்கும் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பின்னர் மாற்று விமானம் மூலம் சவுதி அரேபியா அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமூக ஊடகங்களில், விமானத்தின் இயந்திரத்தில் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இருப்பினும், இந்த காணொளியின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கருடா இந்தோனேசியா நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து, பல விமானங்களை நிறுத்தி வைத்ததுடன் ஊழியர்களையும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற விமான விபத்துக்கள் இந்தோனேசியாவில் அடிக்கடி நிகழ்கிறது. 2021 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் 62 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். சமீபத்தில் மற்றொரு விமான நிறுவனத்தில் விமானிகள் பறக்கும்போது தூங்கியது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.