சிம் கார்டு மோசடி நாடு தழுவிய சோதனையில் மோசடிக் கும்பலுக்கு உதவிய 8 பேர் கைது!

0

குற்றக் கும்பல்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் பெயரில் சிம் கார்டுகளைப் பதிவு செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் ஏழு ஆண்கள், ஒரு பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 முதல் 56 வயதுக்குட்பட்ட இவர்கள், மோசடி தடுப்புப் பிரிவினர் செப்டம்பர் 18 முதல் 26 வரை நாடு தழுவிய அளவில் நடத்திய சிறப்புச் சோதனையின்போது பிடிபட்டனர்.

விசாரணையில், கைதான ஒவ்வொருவரும் 90 முதல் 480 சிம் கார்டுகள் வரை போலி நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்து, அவற்றை சட்டவிரோத கும்பல்களிடம் ஒப்படைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வேலைக்காக அவர்களுக்கு $500 முதல் $1,700 வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகள் பல குற்றச் செயல்கள் நடந்துள்ளன.

குற்றச் செயல்களுக்குப் பயன்படும் என்று தெரிந்தே சிம் கார்டுகளை வழங்குபவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், $10,000 வரை அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.

இதேபோல், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாத நிறுவன இயக்குநர்களுக்கும் ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.