சிங்கப்பூரில் இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று 3 வெளிநாட்டவர்களுக்குச் சிறை!
உலகளாவிய இணையக் குற்றச் செயல்களில் (cybercrimes) ஈடுபட்டதற்காக, யான் பெய்சியான் (39), ஹுவாங் கின் ஜெங் (37), மற்றும் லியு யுச்சி (33) ஆகிய மூன்று சீன நாட்டவர்களுக்கு, நவம்பர் 5 ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட இணையதளங்கள் மற்றும் நிறுவனங்களுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி (hacking), விளையாட்டுகளில் ஏமாற்றுவது மற்றும் பண லாபத்திற்காக தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது போன்ற குற்றங்களுக்காக இவர்கள் 2024, செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த அதிரடி போலீஸ் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.
குற்றக் கும்பலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களும்
ஒரு பெரிய குற்றக் கும்பலின் தலைவனால் இந்த மூவரும் பணியமர்த்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இணையதளங்களில் உள்ள ஓட்டைகளைக் (weak spots) கண்டறிந்து, கணினி அமைப்புகளுக்குள் ஊடுருவி, முக்கியத் தகவல்களைத் திருடுவதே இவர்களின் வேலையாக இருந்துள்ளது.
இவர்களிடம் இருந்து, கணினிகளைத் தாக்கப் பயன்படுத்தும் அதிநவீன கருவிகளும், நூற்றுக்கணக்கான தீங்கிழைக்கும் மென்பொருள்களும் (malware) கைப்பற்றப்பட்டன.
விசாரணையின் போது, இவர்களிடமிருந்து சுமார் S22மில்லியன்(சிங்கப்பூர்டாலர்)மதிப்புள்ளரொக்கப்பணம்,வங்கிக்கணக்குகள்,வாகனங்கள்,கிரிப்டோகரன்சிமற்றும்பலஆடம்பரப்பொருட்களைபோலீஸார்பறிமுதல்செய்தனர்.இதுமட்டுமின்றி,S30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள இவர்களுக்குச் சொந்தமான நான்கு சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
லியுவின் மடிக்கணினியை (laptop) சோதித்தபோது, அதில் கஜகஸ்தான் அரசாங்க அதிகாரிகளின் ரகசிய மின்னஞ்சல் (confidential email) ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, யானின் கருவியில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் சுலபமாகத் தாக்கக்கூடிய (vulnerable) அரசு இணையதளங்கள் பற்றிய செய்திகள் பரிமாறப்பட்டிருந்தன.
இந்த மூவரும், கணினியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் ஒரு பெரிய குற்றக் கும்பலுடன் இணைந்து செயல்பட்டது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
இவர்களின் தலைவன் இன்னும் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இணையக் குற்றச் செயல்களுக்கான ஒரு தளமாக சிங்கப்பூரைப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம்” என்று சிங்கப்பூர் போலீஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.