செம்பவாங் பகுதியில் ஆறு வாகனங்கள் மோதிய விபத்து நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!
இன்று காலை (நவம்பர் 14) செம்பவாங் பகுதியில் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. அட்மிரால்டி ரோடு ஈஸ்ட் மற்றும் டெப்ட்ஃபோர்ட் ரோடு சந்திப்பில் (junction) இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு கார், ஒரு வேன் மற்றும் மூன்று லாரிகள் என மொத்தம் ஆறு வாகனங்கள் சிக்கின. இந்த பயங்கர மோதலில், வேன் ஓட்டுநரும், ஒரு லாரி ஓட்டுநரும் தங்கள் வாகனங்களிலேயே சிக்கிக் கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை. உடனடியாக, SCDF மீட்புப் படையினர் (SCDF officers) அங்கு விரைந்து வந்து, சிக்கியிருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
விபத்தில் காயமடைந்த நான்கு பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 56 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டி, 38 வயதான வேன் ஓட்டுநர், 71 வயதான லாரி ஓட்டுநர் மற்றும் அவருடன் பயணம் செய்த 42 வயதான பயணி ஆகியோர் அடங்குவர்.
இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.