புக்கிட் பாத்தோக்கில் கால்வாய்க்குள் கார் பாய்ந்ததில் 62 வயது பெண் மருத்துவமனையில் அனுமதி!

0

மார்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 3:25 மணியளவில் புக்கிட் பாத்தோக்கில் ஒரு 62 வயது மூதாட்டி ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கருப்பு நிற மாஸ்டா கார் ஒன்று கால்வாயில் பகுதியளவு மூழ்கிய நிலையில், அதன் டிரங்க் மற்றும் கதவு திறந்திருப்பதைக் காட்டுகிறது.

காவல்துறை மற்றும் சிங்கப்பூர் சிவில் தற்காப்பு படைக்கு (SCDF) சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சுயநினைவுடன் இருந்த அந்தப் பெண்மணி, ங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

திடீரென கார் சறுக்கியதே விபத்துக்குக் காரணம் என்பதாக நம்பப்படுகிறது. காவல்துறையினரின் விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

இந்த விபத்து புக்கிட் பாத்தோக் தெரு 32, பிளாக் 315 அருகே நிகழ்ந்தது. அந்த மூதாட்டியின் உடல்நிலை மற்றும் சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

image the straits times

Leave A Reply

Your email address will not be published.