சிங்கப்பூரின் செங்காங்கில் கட்டுமான தளத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து!

0

செங்காங் பகுதியில் கட்டுமான தளம் ஒன்றில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கிரேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பலத்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியுடன் கட்டுமான தளத்தை நோக்கி விரைந்தனர்.

அப்போது, புங்கோல் ரோட்டில், காம்பஸ்வேல் ஸ்ட்ரீட் சந்திப்புக்கு அருகில், கிரேன் ஒன்று வேன் மீது விழுந்திருப்பதை கண்டனர்.

ஆபத்தான இந்த விபத்தில் ஓரளவு ஆறுதலளிக்கும் வகையில், ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது.

அவசர சேவை வாகனத்தில் அவர் உடனடியாக செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கிரேன் ஒரு லாரியில் ஏற்றப்படும்போது திடீரென கவிழ்ந்ததாகக் கூறினர்.

அப்போது கிரேன் அறையில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் மீட்புப் படையினரும் அப்பகுதியை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடினர்.

இந்தக் கட்டுமான தளம் தேசிய நீர் முகமையான PUB-ன் கீழ் இயங்கி வருகிறது. சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளோம்.

இதுபோன்ற விபத்துகள் கட்டுமானப் பணியில் உள்ள ஆபத்துகளை நினைவூட்டுவதோடு, தள பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன.

image the straits times

Leave A Reply

Your email address will not be published.