பலுசிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்தை குறிவைத்து குண்டு தாக்குதல்5 வீரர்கள் உயிரிழப்பு 10 பேர் காயம்!
பலுசிஸ்தானின் நௌஷ்கி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலையோர குண்டுவெடிப்பில் குறைந்தது 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் சென்ற பேருந்தை குறிவைத்து இந்த வெடிகுண்டு வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த மற்றொரு பேருந்தும் பலத்த சேதமடைந்தது. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.