காதல் விவகாரம் தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்!

0

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, காதலித்ததற்காக 22 வயது வித்யா என்ற இளம்பெண் சகோதரனால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் அரசு கல்லூரியில் பயின்றுவந்த வித்யா, விஜயபுரத்தை சேர்ந்த வேண்மணியை காதலித்து வந்தார். ஆனால், குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் வீட்டில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

மார்ச் 30ஆம் தேதி, பெற்றோரும் சகோதரனும் இல்லாத நேரத்தில், வித்யா வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அதன்பிறகு, அவரது குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் அளிக்காமல் உடலை அடக்கம் செய்தனர்.

இதனால் சந்தேகம் ஏற்பட்ட வித்யாவின் காதலர் வேண்மணி, போலீசில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், வித்யாவின் உடலை தோண்டி மருத்துவ பரிசோதனை நடத்தினர். இதில், அவருக்கு தலையில் கடுமையான அடிபட்டது தெரியவந்தது.

கடுமையான விசாரணையில், சகோதரன் சரவணன், காதலை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த கூறியதற்கு வித்யா மறுப்பு தெரிவித்ததால், இரும்புக்கோல் கொண்டு தாக்கி கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களாக சகோதரனிடம் பேச மறுத்துவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் சகோதரன் சரவணன் மற்றும் தந்தை தன்தபானியை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலைக்குப் பிறரும் தொடர்புடையவர்களா என்பதை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த சம்பவம் ஆணவக் கொலை என்ற கொடிய நடைமுறையின் மோசமான விளைவுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.