சிங்கப்பூரில் குறைந்த சம்பளத்தில் உள்ள நீங்கள் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இதை முழுமையாக செய்யுங்கள்!

0

பலர் சிங்கப்பூருக்கு வேலை தேடி வரும்போது அவர்களுக்கு சொந்த நாட்டில் கிடைத்ததை விட குறைவான சம்பளமே கிடைக்கிறது. S Pass அல்லது E Pass வைத்திருப்பவர்களைத் தவிர, சிங்கப்பூரில் நுழைபவர்களுக்கு பெரும்பாலும் சம்பளம் குறைவாகவே இருக்கும்.

சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்த முதல் 8-10 மாதங்களுக்கு, அவர்கள் சிங்கப்பூருக்கு குடிபெயர ஏற்பட்ட கடன்களை அடைத்துக்கொண்டிருப்பார்கள். எனவே சிங்கப்பூரில் அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்ற ஆசை புரிந்துகொள்ளக்கூடியதே.

நல்ல பதவிகளுக்கும், அதிக சம்பளத்திற்கும் உங்களை நீங்களே மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆப்பரேட்டர் வேலைக்கு சிங்கப்பூர் வருகிறீர்கள் என்றால், அதற்குத் தேவையான படிப்புகளை முன்கூட்டியே படித்துவிடுவது நல்லது.

கட்டுமானத் துறையில் ஸ்கேஃபோல்ட் எரெக்டர் (Scaffold Erector), ரிக்கிங் (Rigging), உயரத்தில் வேலை செய்தல் (Working at Heights) போன்ற பல்வேறு படிப்புகள் உள்ளன. இவற்றைப் படிப்பதன் மூலம் உங்கள் திறமைகள் மேம்படும், நல்ல சம்பளம் தரும் வேலைகள் கிடைக்கும். மேலும், “ஸ்பெஷலிஸ்ட் டிப்ளமோ இன் பில்டிங் காஸ்ட் மேனேஜ்மென்ட்”, “ஸ்பெஷலிஸ்ட் டிப்ளமோ இன் பில்டிங் இன்ஃபர்மேஷன் மாடலிங்” போன்ற டிப்ளமோ படிப்புகளும் அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும்.

சிங்கப்பூருக்கு வந்ததும் உங்கள் சம்பளம் குறைவாக இருந்தாலும், கவலைப்படாதீர்கள். உங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொண்டே இருங்கள், நல்ல பதவிகளில் சேருங்கள். அப்போது நல்ல சம்பளம் நிச்சயம்!

Leave A Reply

Your email address will not be published.