தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் தீவில் பெரும் நிலநடுக்கம்!
இன்று அதிகாலை 5:56 மணிக்கு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தத் தீவு ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்குச் சொந்தமான மேக்வாரி தீவுக்கூட்டத்தின் (Macquarie Archipelago) ஒரு பகுதியாகும். இது நியூசிலாந்துக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் தொடங்கிய மையம், பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இருந்தது.
இதுவரை கணிசமான சேதம் எதுவும் பதிவாகவில்லை.