Hougang Avenue சாலை இரண்டு வேன்கள், மினிபஸ் விபத்து மூவர் காயம்!

0

Hougang Avenue 7 இல் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் காயமடைந்தனர். மினிபஸ் ஒன்றும் விபத்தில் சிக்கியது, அதன் ஓட்டுநர் போலிஸாரின் விசாரணையில் உதவி வருகிறார். இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் ஒருவர் இருக்கையில் சிக்கிக்கொண்டார், ஆனால் சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியாளர்களால் அவர் மீட்க்கப்பட்டார்.

64 வயதான வேன் ஓட்டுனரும் 74 வயதான மினிபஸ் ஓட்டுனரும் Changi பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், 40 வயதுடைய நபருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.

காலை 8 மணிக்கு, எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து 112 விபத்து காரணமாக, ஐந்து நிறுத்தங்களைத் தவிர்த்து, திருப்பி விடப்பட்டதாக அறிவித்தது, ஆனால் 30 நிமிடங்களுக்குப் பிறகு இயல்பான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. போலீஸ் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.