சிங்கப்பூருக்கு வேலை அனுமதியில் சென்று மாதம் SGD $2,200 சம்பளம் பெறுவது எப்படி? என்ன செய்ய வேண்டும்.

0

சிங்கப்பூரில் வேலை செய்வதற்காக நன்றாக படித்து Degree, Diploma எடுத்தவர்கள் மற்றும் ஓரளவு படித்தவர்கள் இருவரும் வருகின்றனர். நன்றாகப் படித்தவர்களுக்கு கூட சில சமயங்களில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைப்பது கடினமாக இருக்கிறது. காரணம், விரைவாக சிங்கப்பூர் வந்து விடவேண்டும் என்பதற்காக கிடைக்கும் எந்த வேலையாயினும் ஏற்றுக்கொள்வதாலும் அல்லது ஏஜென்ட் மூலம் நல்ல வேலை என்று சொல்பட்டு ஏமாற்றப்படுவதாலும் ஆகும்.

அதே நேரத்தில், ஓரளவாகப் படித்து சிங்கப்பூர் வரும் பலருக்கு SGD $2,200 வரையில் சம்பளம் கிடைக்க முடியும். ஆரம்பத்தில், சிங்கப்பூருக்கு வேலை அனுமதியில் வருகிறீர்கள் என்றால் ஏதாவது திறன் பரிசோதனை (Skill Test) எழுதி வரவேண்டும். ஆரம்ப நாட்களில், சிங்கப்பூரில் வேலை அனுமதியில் வேலைக்கு நாளொன்றுக்கு SGD $18 முதல் SGD $20 வரை சம்பளமாக தருவார்கள். மேலும், கூடுதலாக வேலை செய்து மாதத்திற்கு SGD $750 தொடக்கம் SGD $850 வரையில் சம்பளம் பெறலாம்.

வேலை அனுமதியில் சிங்கப்பூர் வேலைக்கு வருகிறீர்கள் என்றால், தங்குமிடம் பெரும்பாலும் கம்பெனி கொடுக்கும். எனவே, தங்குமிடத்திற்கு தனியாக செலவில்லாமல் இருக்க முடியும்.

திறன் பரிசோதனை (Skilled Test) எழுதி வேலை அனுமதியில் சிங்கப்பூர் வந்து, கம்பெனி சரியாக இல்லை என்று திரும்ப நாட்டுக்கு போய் மீண்டும் சிங்கப்பூர் வரும் போது மற்ற பணிக்கான அனுமதிகளைப் பெற குறைவான கட்டணம் இருக்கும். இது வேலை அனுமதியில் உள்ள நல்ல விடயம் ஆகும்.

நீங்கள் வேலை நேரம் தவிர்ந்த பிற நேரங்களில் தற்போது செய்யும் வேலைக்கு பொருத்தமான ஒரு கற்கையை (Course) தொடர வேண்டும். உதாரணமாக, சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் அதிகமான வேலைகள் உள்ளன. எனவே, நீங்கள் கட்டுமானத்துறையில் வேலை செய்கிறீர்கள் என்றால் அதற்கான ஒரு Diplomaவை சிங்கப்பூரில் தொடருங்கள்.

ஒன்று அல்லது இரண்டு வருடம் ஆரம்பத்தில் கிடைக்கும் வேலையை செய்து கொண்டே ஏதாவது பொருத்தமான Diplomaவை தொடருங்கள். Diploma Course என்பதால் சராசரியாக ஒரு வருடத்தில் படித்து முடிக்க முடியும். மாலை நேரங்களில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கம்பனி விடுமுறை நேரங்களில் கற்கையை (Course) தொடருங்கள்.

Diploma Course என்பதால் SGD $2,200 தொடக்கம் SGD $2,800க்குள்ளேயே செலவு வரும். கற்கைக்கு செலுத்தும் பணம் கற்கையின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.

சிங்கப்பூர் சென்று முன்னேறுவதற்கான சிறந்த வழி இதுதான். தற்போதைய சிங்கப்பூரில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் இதையே பின்பற்றுகிறார்கள். சில ஊழியர்களுக்கு கம்பெனியே கற்கைக்கு செலவிடும். சிலர் தங்களுடைய பணத்தில் இருந்து கற்கையை மேற்கொள்ள வேண்டி வரும். கம்பெனி செலவழித்து கற்கையை (Course) செய்து கொடுத்தால், குறிப்பிட்ட காலம் அதே கம்பெனியில் வேலை செய்ய வேண்டியதாயிருக்கும்.

மூன்று வருடங்கள் வேலை செய்து, கற்கையை முடித்துவிட்டால், இந்த நேரத்தில் கம்பெனியில் அதற்கான நல்ல இடம் கிடைக்கும் போது, நீங்கள் நல்ல சம்பளம் தரக்கூடிய பாஸ்களுக்கு மாற முடியும். இல்லாவிட்டால், வேலை அனுமதியில் இருந்தே நல்ல சம்பளம் தரும் வேலையில் மாறி நல்ல சம்பளம் பெற முடியும்.

நல்ல அனுபவமும் மற்றும் Diplomaம் இருந்தால், சிங்கப்பூரில் தகுந்த வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம். தற்போதைய வேலை அனுமதியில் வேலை செய்து, கூடுதல் வேலை (Overtime) செய்து மாதம் SGD $2,200 வரையில் சம்பளம் பெறும் பலர் இருக்கிறார்கள். நன்றாகப் படித்து சிங்கப்பூர் வந்து பிடித்த வேலை கிடைக்காவிட்டாலும், தற்போதைய வேலையை நன்றாக செய்து, பிடித்த வேலையை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அது கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.