மூன்று கார் மோதல் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.

0

மார்ச் 15 ஆம் தேதி உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு சந்திப்பில் மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தில் சிக்கிய கார்களில் வெள்ளி நிற செடான், சாம்பல் கலந்த பச்சை நிற வாகனமும், கவிழ்ந்து விழுந்த சிவப்பு நிற காரும் அடங்கும். மோதலில் செடான் காரின் முன் பகுதி சேதமடைந்தது.

மார்ச் 15 ஆம் தேதி நண்பகல் உட்லண்ட்ஸ் அவென்யூ 1 மற்றும் உட்லண்ட்ஸ் அவென்யூ 2 சந்திப்பில் விபத்து ஏற்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

கார்களில் ஒன்றில் பயணித்த 24 வயதுடைய நபர் கூ டெக் பூட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருவருக்கு ஏற்பட்ட சிறு காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர்கள் மறுத்துவிட்டனர்.

விபத்துக்கான காரணத்தையும், சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களையும் கண்டறிய பொலிசாரின் விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.