ஜோகூர் காஸ்வேயில் மே 19 முதல் ஜூன் 5 வரை மோட்டார் சைக்கிள் லேன் மூடப்படும்!

0

மே 19 முதல் ஜூன் 5 வரை, ஜொகூர் காஸ்வேயில் உள்ள மோட்டார் சைக்கிள் பாதை சில நேரங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூடல் RTS Link திட்டப் பணிகளுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் வூட்லண்ட்ஸ் பகுதியில் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலும், மலேசியா நோக்கிச் செல்லும் ஜொகூர் பாரு பகுதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் இந்த மூடல் நடைபெறும். வார இறுதி நாட்களைத் தவிர்த்து, மே 19-20 மற்றும் மே 24 முதல் ஜூன் 5 வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணிகள் நடைபெறும் போது சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு மோட்டார் சைக்கிள் பாதை மூடப்படும். பைக் ஓட்டுபவர்கள் வலதுபுறம் திருப்பி விடப்படுவார்கள். மற்ற வாகனங்கள் பயணத்தைத் தொடர நடு மற்றும் வலது லேன்களுக்கு மாற்றப்படும்.

சாலைப் பயனாளர்கள் இந்த நேரங்களில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, போக்குவரத்து அறிகுறிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜொகூர் பாருவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே விரைவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் RTS Link திட்டம், டிசம்பர் 2026-க்குள் குறிப்பிடத்தக்க அளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.