20 மீட்டர் ஆழத்தில் திடீரென உருவான குழி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!

0

தென் கொரியாவின் சியோல் நகரத்தில் ஒரு வீதியில் தானாக உருவான பெரும் குழிக்குள் விழுந்து, ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த குழி சுமார் 20 மீட்டர் அகலமும் 20 மீட்டர் ஆழமும் கொண்டதாக இருந்தது.

இது திங்கட்கிழமை பிற்பகலில் மியோங்கில்-டொங் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் ஏற்பட்டது. ஒரு மினிவேனில் சென்ற பெண்மணி காயமடைந்தாலும், குழிக்குள் விழவில்லை.

மீட்புப் பணியாளர்கள் முழு இரவும் தேடி, செவ்வாய்க்கிழமை நண்பகல் முன்னதாகவே 30 வயது மதிக்கத்தக்க அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கண்டுபிடித்தனர்.

அவரைப் பார்த்தபோது, அவர் தலைக்கவசம் மற்றும் காலணிகளை அணிந்திருந்தார். அவரது உடலைக் கண்டுபிடிக்கும் முன், மீட்புக்குழுவினர் அவரது மோட்டார் சைக்கிளையும் கைப்பேசியையும் மீட்டனர். இந்த தேடுதல் பணியில் தோண்டும் இயந்திரங்கள், (shovels) மற்றும் பிற கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த விபத்துக்குக் காரணமான விஷயம் இன்னும் வெளிவரவில்லை. சியோல் மேயர் ஓ செ-ஹூன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளை உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.