கோலாலம்பூர் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு பணியாளர் படுகாயம்!

0

ஏப்ரல் 14 ஆம் தேதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பணியாளர் படுகாயமடைந்தார்.

சந்தேக நபர் ஹபீசுல் ஹரவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது மனைவியை சுட முயன்றதாகவும், ஆனால் அதற்கு பதிலாக அவளுடைய பணியாளரை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில், தனிப்பட்ட பிரச்சனையின் விளைவாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆயுதம் ஏந்திய நிலையில் தீவிரமாக தேடப்பட்டு வரும் ஹபீசுல் ஹராவி, மிகவும் ஆபத்தானவர். பொதுமக்கள் அவரை அணுக வேண்டாம் எனவும், அவரைக் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட நபர், 2016 ஆம் ஆண்டு முதல் திருட்டு மற்றும் அரசு அதிகாரி என போலியாக நடித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றப் பின்னணியைக் கொண்ட சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

படுகாயமடைந்த பணியாளரின் முதலாளி, ஃபரா சீ, இந்த சம்பவத்தை ஃபேஸ்புக்கில் உறுதி செய்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு கொலை முயற்சியாக பதிவு செய்யப்பட்டு, சந்தேக நபரை கைது செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசாரணை நடந்து வருகிறது.

image The star news

Leave A Reply

Your email address will not be published.