நியூயார்க் ஹெலிகாப்டர் விபத்து: ஸ்பெயினைச் சேர்ந்த விமானி உட்பட ஆறு பேர் பலி!
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஒரு தனியார் ஹெலிகாப்டர் நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் விழுந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்று நியூயார்க் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் ஸ்பெயினிலிருந்து வந்த ஒரு விமானி மற்றும் ஒரு குடும்பத்தினர் அடங்கியுள்ளனர். நியூயார்க் தீயணைப்பு துறையினர், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:17 மணிக்கு தகவல் கிடைத்ததும், மீட்பு பணிகளை உடனடியாக ஆரம்பித்தனர்.
நியூ ஜெர்சி போலீசார் தெரிவித்ததாவது, N216MH என்ற பதிவு எண்ணுடைய பெல் 206L-4 லாங்ரேஞ்சர் IV வகை ஹெலிகாப்டரில் ஓர் விமானி உட்பட 6 பேர் பயணித்துள்ளனர்.
விமானம் விபத்துக்கு முன் சுமார் 15 நிமிடங்கள் பறந்ததாக கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.