குயின் மேரி 2 கப்பலில் நோரோ வைரஸ் பரவல் – 250 பயணிகள் பாதிப்பு!
குனார்ட் நிறுவனம் செயல்படுத்தும் குயின் மேரி 2 என்ற ஆடம்பரக் கப்பல், கரீபியக் கடலிலிருந்து இங்கிலாந்து நோக்கி நியூயோர்க் வழியாக பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு வைரஸ் பரவல் ஏற்பட்டது.
மிகப்பெரிய மற்றும் பிரபலமான இந்த ஆடம்பரக் கப்பலில் 2,000க்கும் மேற்பட்ட பயணிகளும், 1,200 பணியாளர்களும் இருந்தனர். இது “மிதக்கும் சொர்க்கம்” என்றும் அழைக்கப்படுகிறது.
அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து செல்லும்போது, பயணிகளும் பணியாளர்களும் திடீரென நோரோவைரஸால் பாதிக்கப்பட்டனர். இது அதிக வேகத்தில் பரவும் வைரஸ் ஆகும் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (CDC) தகவலின்படி, 250 பயணிகள் மற்றும் 20 பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதை கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, முழு கப்பலும் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.
சுகாதார அதிகாரிகள், இதற்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நோரோவைரஸ் ஆபத்தானதாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.