குழந்தை ஜேன் ரய்யான் கொலை பெற்றோர் கைது!

0

(பெர்னாமா) – ஆட்டிசம் பாதித்த தன் ஆறு வயது மகன் ஜேன் ரய்யான் அப்துல் மத்தீன் கொலை வழக்கில் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருவரும் 28 வயதான இந்த தம்பதியர், செலாங்கூர், புஞ்சாக் ஆலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

செலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் இந்த கைதை உறுதி செய்தார். இன்று (சனிக்கிழமை) பெற்றோர் இருவரையும் ரிமாண்ட் செய்ய பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகன் ஜேன் ரய்யான் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி தமான்சாரா டாமாய் பகுதியில் உள்ள இடாமன் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் அருகே ஓடையில் சடலமாக கிடந்தது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து இச்சம்பவம் நடந்தது. பிரேத பரிசோதனையில் அவன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதும், தற்காத்துக்கொள்ள முயன்றதால் உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.

கொலையின் பின்னணி குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.